AI Dangers: செயற்கை நுண்ணறிவு கருவிகளால் உலகிற்கு நடக்கப்போகும் ஆபத்துகள்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Hollywood திரைப்படங்களில் நாம் Terminator திரைப்படத்தை பார்த்திருப்போம். அதில் செயற்கை நுண்ணறிவு காரணமாக உலகில் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை பற்றி படம் எடுத்திருப்பார்கள். முதலில் மனிதர்ளுக்கு உதவியாக இருக்கும் AI ஒரு கட்டத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும்.

தானாகவே சிந்திக்கும் திறன் உள்ள அவைகளால் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். இதற்கு சிறந்த உதாரணம் ChatGPT. நாம் குறிப்பிட்ட ஒரு விவரத்தை உள்ளிட்டால் தானாகவே அதை ஆராய்ந்து நமக்கு வேண்டிய பதிலை மனிதர்களை போலவே அது அளிக்கிறது. AI காரணமாக ஏற்படப்போகும் சில முக்கிய ஆபத்துகள் பற்றி பார்க்கலாம்.

1.பொய்யான தகவல்கள்
Ai அளிக்கும் அனைத்து தகவல்களும் உண்மையான தகவலாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. சில தகவல்கள் பொய்யானவையாக இருக்கலாம். அதனால் உலகில் நடக்கும் ஒரு முக்கியமான செய்தி பற்றி பொய்யான விவரங்கள் வெளியாகலாம்.

மேலும் இதனால் மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களில் பொய்கள் பரப்பப்பட்டு அதனால் பெரும் விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரு விஷயத்தை பற்றிய உண்மை தன்மை போய்விடும்.

AI மூலமாக நாம் போட்டோ மற்றும் வீடியோ கூட உருவாக்கலாம். இவை ஆரம்பகட்டத்தில் இருந்தாலும் எதிர்காலத்தில் முழுமையடைந்து ஒரு நிகழ்வு பற்றி மனிதர்களை உண்மை என்று நம்பவைக்கவும் முடியும்.

2.வேலையின்மை

மனிதர்கள் சந்திக்கப்போகும் மிகமுக்கிய பிரச்சனை எது என்றால் அது வேலையின்மை. ஏற்கனவே இயந்திரங்கள் காரணமாக மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. மேலும் IT போன்ற துறைகளில் வேலை செய்பவர்கள் இதனால் பெரும் அளவு வேலை இழக்க கூடும்.

முக்கியமாக Data Entry, Customer Service, Social Media manager, Copywriters, Translators என பலர் வேலை இழக்க கூடும். ஒரு புள்ளி விவரத்தின் அடிப்படையில் AI காரணமாக உலகில் 300 மில்லியன் மக்கள் வேலை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது.

3.தனியுரிமை பாதிக்கப்படும்

வளர்ந்து வரும் AI காரணமாக மக்களின் தனியுரிமை பெரும் அளவு பாதிக்கப்படும். பலரது தனிப்பட்ட விவரங்கள் AI மூலம் திருடப்படலாம். மேலும் ஒருவரின் விவரத்தை வைத்து அவரை போலவே AI பேசவும் எழுதவும் வைக்க முடியும். மக்களை AI மூலம் நம்பவைத்து ஏமாற்றவும் முடியும்.

4.போர் நடக்கலாம்

இன்று உலகில் பல நாட்டு ராணுவங்கள் AI மூலம் இயங்கும் விமானங்கள், ஆயுதங்கள், வாகனங்கள், டிரோன் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். நாளை மனிதர்களுக்கு மீறிய கட்டுப்பாட்டிற்குள் இந்த AI மூலம் இயங்கும் இயந்திரங்கள் சென்றால் உலகில் போர் மூளும் அபாயமும் உள்ளது.

5.மனித குல பாதுகாப்பு

மனிதர்களை விட வேகமாக AI செயல்படுவதால் அதன் காரணமாக மனிதர்களுக்கு ஆபத்தும் நேரலாம் என்று UK அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு தெரிவித்தது. இதனால் இந்த AI கட்டுப்படுத்த தனியாக ஒரு பாதுகாப்பு அமைப்பு உருவாக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.