CJI On WFH: கொரோனாவின் ருத்ரதாண்டவத்தை அடக்க ஹைப்ரிட் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’

நியூடெல்லி: இந்தியாவில் இன்று (2023 ஏப்ரல் 5, புதன்கிழமை) 4,435 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது 163 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளில் பதிவாகியுள்ள அதிக கொரோனா பாதிப்பு என்பது அச்சத்தை அதிகரிக்கிறது. நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகளுக்கு மத்தியில், உச்ச நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கறிஞர்களை விசாரிக்க தயாராக உள்ளது என்று இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India ) டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

சமீபத்திய ஊடக அறிக்கைகளைக் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஜே.பி. பர்திவாலா அடங்கிய பெஞ்ச், ஹைபிரிட் முறையில் ஆஜராக வழக்கறிஞர்களை அனுமதிக்க நீதிமன்றம் தயாராக இருப்பதாகக் கூறியது.

வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்கு விசாரணை

“வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்க முடியும்” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளா.

ஹைப்ரிட் முறையில் வழக்கு விசாரணை

முறையை, அதாவது வழக்குகளை நீதிமன்றத்திலேயே நேரடியாகவும் அல்லது ஆன்லைனிலும் (தேவைக்கேற்ப) விசாரிப்பது என்ற சோதனையை பரிசோதித்து வந்த உச்ச நீதிமன்றம், இது உகந்ததாக இருக்கும் என்று கருதுகிறது.  

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா வைரஸ் வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக வீடியோ கான்ஃபரசிங்கில் வழக்குகள் விசாரிக்கும் முறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.  

கொரோனா வைரஸ் பரவல்

ஒமிக்ரான் (Omicron) வகை வைரஸ் மாறுபாட்டால் அதிகரித்த பாதிப்பு மற்றும் கவலைகளைத் தொடர்ந்து, அனைத்து நேரடி நீதிமன்ற விசாரணைகளும் ஜனவரி 2022 இல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன. அதற்கு முன்னதாக 2020 இல் கோவிட்-19 தொடங்கியபோது உச்ச நீதிமன்றம் ஆன்லைனில் வழக்குகளை விசாரித்தது.

பிறகு, நீதிமன்றத்திலேயே வழக்கு விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பிறகும், உச்ச நீதிமன்ற ஆப் மற்றும் யூடியூப் மூலம் அரசியலமைப்பு பெஞ்ச் நடவடிக்கைகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதை உச்ச நீதிமன்றம் தொடங்கியுள்ளது.

கோவிட்-19 பரவல் காரணமாக இந்தியாவில் விர்ச்சுவல் நீதிமன்ற விசாரணைகள்
கொரோனா தொடங்கிய பிறகு லாக்டவுன் தொடங்கியதில் இருந்து, இந்தியாவின் மாவட்ட நீதிமன்றங்கள் 1,23,19,917 வழக்குகளை, ஆன்லைனில் விசாரித்துள்ளன. இந்த காலகட்டத்தில், நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் பிப்ரவரி 28, 2022 வரை 61,02,859 வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தன.

லாக்டவுன் காலம் தொடங்கியதில் இருந்து மார்ச் 14, 2022 வரை உச்ச நீதிமன்றம் ஆன்லைனில் 2,18,891 வழக்குகளை விசாரித்துள்ளது. இது மிகப்பெரிய சாதனைப் பதிவாகும்.

விர்சுவல் நீதிமன்றம் (Virtual court) நடத்தையில் சீரான தன்மை மற்றும் தரப்படுத்தலைக் கொண்டு வருவதற்காக, ஏப்ரல் 6, 2020 அன்று உச்ச நீதிமன்றம், ஒரு விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது, இது விர்சுவல் நீதிமன்றம் மூலம் செய்யப்படும் நீதிமன்ற விசாரணைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தையும், அதற்கான செல்லுபடியையும் அளித்தது.

அத்துடன், 5 நீதிபதிகள் கொண்ட குழுவால் விர்சுவல் நீதிமன்ற விதிகள் உருவாக்கப்பட்டன, இந்த விதிகள் அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்பப்பட்டது. அப்போதிருந்து, 24 க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்றங்கள் வீடியோ கான்பரன்சிங் விதிகளை அமல்படுத்தியுள்ளன.

கோவிட் பாதிப்பு 163 நாட்களுக்கு பிறகு அதிகபட்ச உயர்வு
இந்தியாவில் புதன்கிழமை 4,435 புதிய
கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது 163 நாட்களில், ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை ஆகும். தற்போது நாட்டில் செயலில் உள்ள கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,091 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை

இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை தற்போது 4,47,33,719 ஆக உள்ளது, 15 புதிய இறப்புகளுடன், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை 5,30,916 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன; சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது; கேரளாவில் பலி எண்ணிக்கை 4.

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,79,712 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் வழக்கு இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. கோவிட் பரவலின் தினசரி நேர்மறை விகிதம் 3.38 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 2.79 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.