சென்னை: Dhanush (தனுஷ்) நடிகர் தனுஷை மூத்த நடிகை சரண்யா லெஃப்ட் ரைட் வாங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்திய சினிமாவிலேயே முக்கியமான நடிகர் தனுஷ். கோலிவுட்டில் தொடங்கிய அவரது பயணம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என நீண்டிருக்கிறது. அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர் தனுஷ்
துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷுக்கு காதல் கொண்டேன் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து அவர் கமர்ஷியல் பாதையில் பயணபட்டாலும் அவ்வப்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்தார். கமர்ஷியலாக நடித்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் அதில் தனுஷின் நடிப்பு பெஞ்ச் மார்க்காக மாற ஆரம்பித்தது. இதனால் தமிழின் ஆகச்சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார் தனுஷ்.
மாஸ் ஹிட் கொடுத்த தனுஷ்
தனுஷ் கமர்ஷியல் ரீதியாக எத்தனையோ ஹிட்டுகளை கொடுத்திருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒரு படம்தான் வேலையில்லா பட்டதாரி. வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்குநராக அறிமுகமான படம் அது. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அப்படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா, அமலா பால், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கமர்ஷியலாக இருந்தாலும் எமோஷனல்
ரகுவரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தனுஷ். அவருக்கு தாயாக சரண்யா நடித்திருப்பார். படம் பக்கா கமர்ஷியலாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் தனுஷின் குறும்புத்தனமான நடிப்பும், தாய் சரண்யா மீதான பாசமும், தாய் இறந்த பிறகு குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகுவதும் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சரண்யா படத்தில் உயிரிழக்கும் காட்சியிலும், அதனை ஒட்டி வரும் பாடலும் பக்கா எமோஷனலுடன் ரசிகர்களிடம் கனெக்ட் ஆனது.
சரண்யாவுக்கு ஸ்பெஷல்
சரண்யா இதுவரை எத்தனையோ படங்களில் அம்மா கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஆனால் வேலையில்லா பட்டதாரி படத்தில் அவர் ஏற்றிருந்த அம்மா கதாபாத்திரம் அப்படியே ஒரு மிடில் க்ளாஸ் அம்மாவை பார்ப்பதுபோல் இருந்ததால் அவருக்கு எப்போதுமே இந்தப் படம் ஒரு அடையாளமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும்போது தனுஷை கடுமையாக திட்டினாராம் சரண்யா.
தனுஷை திட்டிய சரண்யா
அதாவது அந்தப் படத்தில் நடிக்கும்போது இதெல்லாம் ரோலா என நினைத்துக்கொள்வாராம் சரண்யா. அதுமட்டுமின்றி தனுஷை கூப்பிட்டு எதுக்காக இந்தப் படத்துல என்னை நடிக்க வைச்சீங்க என கேட்பாராம். அதற்கு தனுஷோ பொறுமையா பாருங்க மேடம் என்பாராம். உடனே, சும்மா இருங்க தனுஷ் வீட்டுக்கு வந்து கதை சொல்றேன் சாப்பாடு சமைத்து போடுவீங்களா என்றெல்லாம் சொன்னீங்க என சொல்லிவிட்டு; இதெல்லாம் ஒரு படமா என்ற நினைப்பிலேயே நடித்தாராம் சரண்யா.
படம் பிரமித்துப்போன சரண்யா
ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்துவிட்டு டப்பிங்கின்போது படத்தை பார்த்த சரண்யா இந்த சீன் எல்லாம் நாம்தான் நடித்தோமா. இதை எப்படி அவர் எடுத்தார். இன்னும் நமக்கு சீன்கள் இருக்கிறதா என பிரமித்துபோய்விட்டாராம். இந்தத் தகவலை சரண்யா ஒரு பேட்டியின்போது மனம் திறந்து பேசினார்.