ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் உருவாகும் முதல் 400cc+ என்ஜின் பெற்ற முதல் பைக் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக் HD 4XX என்ற பெயருடன் சோதனை செய்யப்பட்டு வவருகின்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய சந்தையில் குறைந்த விலையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு சவாலாக விளங்கும் வகையில் ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணி அமைத்திருந்தது.
ஹீரோ-ஹார்லி டேவிட்சன் பைக்
ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஏர் அல்லது ஆயில் கூல்டு 400cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றிருக்கும். இந்த என்ஜின் 440cc இருக்கலாம். ஹார்லியின் நிறுவனத்தின் ஐகானிக் 883cc V-ட்வின் என்ஜினை இரண்டாக பிரித்தால் 440cc என்ஜினாக இருக்கலாம் அல்லது ஹீரோ புதிய என்ஜினை உருவாக்கியிருக்கலாம்.
தற்போது, பவர், டார்க் தொடர்பான எந்த தகவலும் இல்லை. தோற்ற வடிவமைப்பில் முந்தைய ஹார்லி-டேவிட்சன் XR1200 ரோட்ஸ்டர் பைக்கில் இருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்பினை கொண்டுள்ளது. ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்ற மிக நேர்த்தியான முரட்டுதனமான டேங்க் கொண்டு அகலமான டயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன் அமைப்பில் ஹார்லியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கிற்குப் பதிலாக அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டதாக அமைந்துள்ளது.
பைக்கின் முன் மற்றும் பின்புறத்தில் Bybre டிஸ்க் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது (இரட்டை சேனல் ஏபிஎஸ் ), மேலும் அலாய் வீல் முன்பக்கத்தில் 18-இன்ச் மற்றும் பின்புறம் 17-இன்ச் கொடுக்கப்பட்டு சீயட் ஜூம் க்ரூஸ் 140 டயர்களைக் கொண்டுள்ளது.
8,000rpm ரெட்லைன் குறிக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் காணப்படுகின்றன. இந்த கிளஸ்ட்டரில் ரைடர்ஸ் தங்கள் ஸ்மார்ட்போனை மோட்டார்சைக்கிளுடன் புளூடூத் இணைப்பையும் ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்லி-டேவிட்சன் ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 மாடலுக்கு போட்டியாக இந்தியாவில் நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் ஹீரோ நிறுவனத்தின் மூலமாக புதிய ஹார்லி-டேவிட்சன் HD 440 பைக் விலை ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) அமைந்திருக்கலாம்.
வரும் தீபாவளி பன்டிகைக்கு முன்னதாக ஹார்லி-டேவிட்சன் 350 விற்பனைக்கு வரக்கூடும்.