சென்னை: கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது ‘லியோ’ திரைப்படம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்து, இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கவுள்ளது.
இதனையடுத்து இந்த படத்தில் விஜய் சேதுபதியிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கால்ஷீட் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் என்ன ரோல்? எத்தனை நாள் கால்ஷீட் கேட்டார் என்பதை இங்கு பார்க்கலாம்.
சென்னையில் ஷூட்டிங்:
சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மிகப்பிரமாண்டமான செட் ஒன்றை படக்குழு அமைத்து அங்கே படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளது. விஜய்யின் வீடு, சாக்லேட் பாக்டரி போன்ற செட்களை பிரசாத் ஸ்டுடியோவில் போட்டு அங்கே நடக்கும் காட்சிகளை படமாக இருக்கின்றார் லோகேஷ். மேலும் விஜய் மற்றும் த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகள், விஜய் மற்றும் அர்ஜுன் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் சென்னையில் தான் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
அர்ஜுன் புது கெட்டப்:
லியோ படத்தில் அர்ஜுன் தலை முடியில் கெட்டப் மாற்றம் இருக்கும் என்றும், கண்ணில் லென்ஸ் அணிந்து வருவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் இன்னும் அர்ஜுன் லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. படப்பிடிப்பிற்கு சென்ற பிறகு தான் இந்த கெட்டப் மாற்றம் இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
LCU வில் லியோ:
LCU வில் லியோ படம் – அதாவது லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் உள்ள கதாபாத்திரங்கள் இந்த லியோ படத்திலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, விக்ரம் படத்தில் நடித்த விஜய் சேதுபதி இந்த படத்திலும் நடிப்பாரா என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்தது. இந்நிலையில், இப்பொழுது லியோ – விஜய் சேதுபதி சம்பந்தமாக ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.
என்ன அப்டேட்?
அதாவது விஜய் சேதுபதியிடம், லோகேஷ் கனகராஜ் 3 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த முறை படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் கால்ஷீட் கேட்கவில்லை. மாறாக, டப்பிங் பணிகளுக்காக கால்ஷீட் கேட்டுள்ளார். ஒரு வேளை, Story Teller ராக விஜய் சேதுபதி குரல் பயன்படுத்தப்படுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.