எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ நீல நிற டிக் பெற தனியாக நாம் பணம் செலுத்தவேண்டும். ஆனால் இதற்கு உலகளவில் பெரிய அளவு எதிர்ப்புகள் கிளம்பின. அதில் முக்கியமாக சில பிரபலங்களும், அமைப்புகளும் அடங்கும். அவர்களின் பட்டியல் குறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
1.LeBron James
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரரான இவர் Twitter Blue tik பெற தனியாக பணம் செலவழிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். தான் எந்த பணமும் செலவளிக்கப்போவதில்லை என்றும் அதனால் தன்னுடைய கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
2.White House
அமெரிக்கா அரசாங்கம் இயங்கும் வெள்ளை மாளிகை ட்விட்டர் ப்ளூ டிக் பெற இதுவரை பணம் செலவழிக்கவில்லை. ஆனால் வெள்ளை மாளிகையில் வேலை செய்பவர்கள் அவர்களின் சொந்த பணத்தில் Twitter Blue tik பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
3.The New York Times
உலகின் முன்னணி பத்திரிகை நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் ட்விட்டர் ப்ளூ பெற பணம் செலுத்தமாட்டோம் என்று அறிவித்த முதல் பத்திரிகை ஆகும். மேலும் பத்திரிகையாளர்களையும் அவ்வாறு பெற அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தது. இதற்கு பதில் தெரிவித்த எலன் மஸ்க் அவர்களின் பத்திரிகையை படிக்க பணம் கேட்கும் அவர்கள் இவ்வாறு செய்வது விசித்திரமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
4.Michael Thomas
அமெரிக்காவின் பிரபல கால்பந்து விளையாட்டான NFL போட்டிகளில் பங்குபெற மைகேல் தாமஸ் ட்விட்டர் ப்ளூ தனக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார்.
5.Monica Lewinsky
பிரபல அமெரிக்கா வழக்கறிஞரான இவர் தனக்கு ட்விட்டர் ப்ளூ பெறவேண்டிய தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Twitter Blue சந்தா என்ன?
அதாவது நமது ட்விட்டர் கணக்குகளுக்கு அதிகாரபூர்வ மதிப்பு அளிப்பதே இந்த Blue Tik ஆகும். இது இதற்கு முன்னால் இலவசமகா முக்கிய நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் ப்ளூ டிக் பெற தனியாக பணம் செலுத்தவேண்டும் என்று கூறினார். இதனால் பலர் கோபம் அடைந்தனர். பல பிரபலங்கள் ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக அறிவித்தனர்.
ஒரு நபருக்கு மாதம் 8 டாலர் விலையும், ஒரு நிறுவனத்திற்கு தொடக்க விலையாக மாதம் 1000 டாலர் நிர்ணயித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாக ப்ளூ டிக் பெறவேண்டும் என்றால் மாதம் 50 டாலர் பணம் செலுத்தவேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்