சென்னை: Youtuber Irfan Home Tour (யூட்யூபர் இர்ஃபான் ஹோம் டூர்) யூட்யூபர் இர்ஃபானின் ஹோம் டூர் வீடியோ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் தற்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் வந்துவிட்டதால் பலரும் அதனை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமானவைகளை செய்துவருகின்றனர். அதில் அதிகம் பேர் செய்வது யூட்யூப் சேனல் ஆரம்பிப்பது. பல யூட்யூப் சேனல்கள் இருந்தாலும் தனித்துவமிக்க யூட்யூப் சேனல்களே நிலைக்கின்றன.
பட்டையை கிளப்பும் இர்ஃபான்ஸ் வியூ
அப்படிப்பட்ட ஒரு யூட்யூப் சேனல்தான் இர்ஃபான்ஸ் வியூ. இர்ஃபான் என்பவர் நடத்திவரும் இந்த யூட்யூப் சேனலில் உணவு குறித்து பல வீடியோக்களை ஆரம்பத்தில் பதிவு செய்துவந்தார். அவரது எளிமையான பேச்சும், தேடி தேடி வித விதமாக உணவு குறித்த வீடியோக்களை அப்லோட் செய்ததாலும் வெகு சீக்கிரத்திலேயே பிரபலம ஆனார் இர்ஃபான்.
பிரபலங்களுடன் இணைந்த இர்ஃபான்
உள்ளூரில் மட்டும் வீடியோ செய்துகொண்டிருந்த இர்ஃபான் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் வெளிநாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். அங்கிருந்து அவர் அப்லோட் செய்த வீடியோக்களும் பிரபலமடைந்தன. மேலும் தமிழ்நாட்டுக்குள் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் உணவு அருந்திக்கொண்டே பேட்டி எடுக்கும் இவரை பலரும் ரசிக்கின்றனர்.
இர்ஃபானுக்கு குவியும் வருமானம்
யூட்யூப் சேனல் மூலம் இர்ஃபானுக்கு வருமானம் கொட்டிக்கொண்டிருக்கிறது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியிருக்கிறது. யூட்யூப் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து இர்ஃபான் கார் ஒன்றை வாங்கினார். அதனையடுத்து வீடு ஒன்றையும் கட்டியுள்ளார். அவர் பகிர்ந்த ஹோம் டூர் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1200 ஸ்கொயர் ஃபீட்டில் வீடு
இர்ஃபானின் வீடு அமைந்திருக்கும் நிலம் மொத்தம் 1500 ஸ்கொயர் ஃபீட் ஆகும். இதில் வீடு கட்டப்பட்டிருப்பது மட்டும் 1200 ஸ்கொயர் ஃபீட். வீட்டுக்குள் நுழைந்ததும் ஹால் இருக்கிறது. அந்த ஹாலில் 55 இஞ்ச் உடைய LED டிவி மற்றும் வருபவர்கள் அமர்வதற்கு வசதியாக சோஃபா செட்டுகள் போடப்பட்டுள்ளன. முதலில் ஓப்பன் ஸ்பேஸாக இருந்த ஹாலில் இர்ஃபானின் நண்பர்கள் கொடுத்த ஐடியாவால் தடுப்பு போடப்பட்டதாம். அந்த ஷெல்ஃப்பில் அழகழகான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
பிரமிப்பூட்டும் அடுப்பறை
ஹாலின் பக்கத்திலேயே அடுப்பறை அமைந்திருக்கிறது. அதில் இரண்டு கதவுகள் கொண்ட ஃப்ரிட்ஜ் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த ஃப்ரிட்ஜின் கண்ணாடி டோரில் இரண்டு முறை தட்டினால் விளக்கு எரிந்து உள்ளே இருக்கும் பொருட்களை நாம் கதவை திறக்காமலேயே பார்க்கும் வசதி இர்ஃபான் வாங்கியிருக்கும் ஃப்ரிட்ஜில் இருக்கிறது. மார்பில் டைனிங் டேபிளும், குஷன் சேர்களும் அமைந்திருக்கின்றன. அதேபோல் ப்ரேக்ஃபாஸ்ட் கவுண்ட்டர் என்ற ஒன்றும் இருக்கிறது.
இர்ஃபானின் ஒர்க்கிங் ரூம்
ஹாலை ஒட்டியிருக்கும் ரூம் இர்ஃபானுக்கானது. அந்த ரூமில்தான் இர்ஃபான் வீடியோக்களை ஷூட்டிங் செய்தும் எடிட் செய்தும் அப்லோட் செய்வாராம். அதே ரூமில் சோஃபா ஒன்றையும் வைத்திருக்கிறார். அது சோஃபா மட்டுமில்லை அந்த சோஃபாவை விரித்தால் மெத்தையாக மாறிவிடும் வகையில் சோஃபா அமைந்திருக்கிறது. அவரது ரூமை ஒட்டியோ சின்ன பின்புறம் அமைந்திருக்கிறது. அதில் சப்போட்டா மரமும், மாங்காய் மரமும் அமைந்திருக்கின்றன. மரங்கள் மட்டுமின்றி நிறைய பூக்களையும், செடிகளையும் நட வேண்டும் என்பதுதான் இர்ஃபானின் ஆசையாம்.
வீட்டில் இர்ஃபானின் ஃபேவரைட் ஏரியா இதுதானாம்
வீட்டின் முதல் தளத்தில் ப்ரைவேட் லிவிங் ஏரியா இருக்கிறது. ரிக்ளைனர் சோஃபாவுடன் அமைந்திருக்கும் அந்த ரூமில் சோனி டிவி ஒன்று இருக்கிறது. இங்கு உட்கார்ந்துதான் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நிறைய கேம்ஸ்கள் விளையாடுவாராம் இர்ஃபான். அதேபோல் ரிமோட்டில் கண்ட்ரோல் செய்யக்கூடிய ஃபேன் ஒன்றும் இருக்கிறது. அடுத்ததாக இன்னொரு ரூம் அவருடைய தாய்க்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இர்ஃபான் படுப்பதற்காக இன்னொரு அறை இருக்கிறது. அவரது ரூமிலும் 55 இன்ச் உடைய LED டிவி ஒன்று அமைந்திருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கின்றனர்.