பாமக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நின்று கொண்டிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பாமக கட்சிக் கொடி ஏற்றும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அழைத்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அன்புமணிக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கட்சி கொடியினை ஏற்றிவிட்டு அன்புமணி மேடைக்கு வந்தார். அந்த மேடை மிகவும் சிறியதாக அமைக்கப்பட்டிருந்தது. அன்புமணி அதில் ஏறியதும் அவரோடு அதிக நபர்கள் மேடை மீது ஏறினர்.
எனவே பாரம் தாங்காமல் மேடை திடீரென சரிந்தது. சுதாரித்துக் கொண்ட அன்புமணி, மேடையில் இருந்து கீழே குதித்தார். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அன்புமணிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து அன்புமணி அங்கிருந்த இருக்கை ஒன்றில் ஏறி அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசினார். அன்புமணி இருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in