சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில், சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு :
* மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை ₹15,000-ல் இருந்து ₹25,000-ஆக உயர்த்தப்படும்.
* மேலும் கடலில் மீன்ப்டிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ₹250-லிருந்து ₹350-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* கால்நடை பராமரிப்பு மானியக் கோரிக்கை. ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தாமல் மின்னணு முறையில் அடையாளம் கண்டு பதிவு செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை ஆன்லைன் அமைப்பு மூலம் பதிவு செய்து அனுமதி அளிக்க ₹87 லட்சம் செலவில் இணைய முகப்பு உருவாக்கப்படும்.
முன்னதாக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் வெளியிட்ட அறிவிப்புகளில் சில :
* பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களின் நலன் காக்க “கலைஞர் சங்க பணியாளர்கள் நல நிதி” உருவாக்கப்படும். இந்த நிதி மூலம் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.5 லட்சம், திருமணத்திற்கு ரூ.30 ஆயிரம், கல்விக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
* ஆவினில் பால் வாங்குபவர்களுக்கு இ-பால் அட்டை (e- Milk card ) வழங்கப்படும். இதன்படி மாதந்திர பால் அட்டை இணையதளம் மூலம் வழங்கப்படும்.
* பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால் பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 2 லட்சம் புதிய கறவை மாடுகள் வாங்கப்படும்.
* புதிய தொழில் நுட்பங்களை காட்சிப்படுத்தும் வண்ணம் தேசிய பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும். இதில் நவீன தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கு, பயிற்சி பட்டறைகள், கண்காட்சிகள் நடத்தப்படும்.