பிட் படம் ரிலீஸ் செய்தவர் அண்ணாமலை! விளாசிய காயத்திரி ரகுராம்!

தமிழக பாஜவின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் காயத்திரி ரகுராம். பாஜகவில் இருந்த சமயத்தில் திமுகவை பல வகைகளில் விமர்சனம் செய்து வந்தார்.  பின்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்பு பாஜகவில் இருந்து விலகினார்.  பாஜகவில் இருந்து விலகிய பின்பு அண்ணாமலை மற்றும் தமிழக பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் காயத்திரி ரகுராம்.  பாஜக சார்பிலும் காயத்திரி ரகுராமை விமர்சனம் செய்து வந்தனர்.  இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, சினிமா பட ரிலீஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் அமைச்சர் தான் கல்வித்துறைக்கு அமைச்சராக உள்ளார்.  தவறான ஆட்கள் கையில் தமிழக கல்வித்துறை சிக்கி உள்ளது என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த காயத்திரி ரகுராம், “பிட் பட ரிலீஸ் செய்த மேனேஜர் ஆடு தான் தமிழக பாஜ௧ தலைவராக உள்ளார்.  தவறான மேனேஜர் கையில் தமிழக பாஜ௧ சிக்கியுள்ளது.  ஆட்டின் எலும்பு துண்டுகளா, ஓகேவா? சினிமா என்றால் உங்களுக்கு இவ்வளவு தாழ்வுமா? ஒரு துறையை இழிவுபடுத்தியதற்காக குஷ்பு அக்கா தனது கட்சி மேனேஜரின் இந்த அறிக்கையைப் படிக்க வெட்கப்பட வேண்டும்.  பிரச்சாரத்திற்கு மட்டும் பாஜக வேட்பாளர்களை எம்எல்ஏ அல்லது எம்பி ஆக்குவதற்கு சினிமாவில் இருந்து ஒருவர் தேவை. பாஜக கர்நாடக பிரச்சாரத்தில் இப்போது கிச்சா சுதீப் மற்றும் தர்ஷன் இணைந்தார்களா? ஏன் அண்ணாமலை உங்கள் நடிப்புத் திறமையைக் காட்டி வாக்குகளைப் பெறுங்கள். நீங்கள் இங்கு தலைவராக தமிழகத்தில் மோசமாக நடிகிறீர்கள்” என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

மேலும் சிறிது தினங்களுக்கு முன்பு EWS ரிசர்வேசன் குறித்து அண்ணாமலை பதிவிட்டதற்கு பதிலடி கொடுத்த காயத்திரி ரகுராம்,” பிறகு தமிழக பா.ஜ.க ஏன் இன்னும் EWS க்காக போராட்டம் நடத்தவில்லை? விடுபட்ட 60 சமூகத்திற்காக ஏன் பேசவில்லை? இத்தனை நாட்களாக உங்களைத் தடுத்து நிறுத்தியது எது? மற்றவர்களை சாராய அமைச்சர் என்றும் அழுகிய முட்டை அமைச்சர் என்றும் பெயர்களை அழைக்காமல், ஏதாவது ஆக்கபூர்வமான அரசியல் செய்தீர்களா? இப்படி 6 மில்லியன் சப்ஸ்க்ரைபர் யூடியூப் சேனல்களில் மார்க்கெட் மதிப்பு கொண்ட விஷ்யம் மட்டுமே நீங்கள் பேசுவீர்கள். உங்களால் பொருளாதார நீதிக்காக ஏன் பேச முடியாது? சமூக ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ, நீதி என்பது அனைவருக்கும் நியாயம். யாரும் ஏழையாக இருக்கக்கூடாது என்பதே குறிக்கோள் இருக்க வேண்டும். ஈ.டபிள்யூ.எஸ் வழங்கப்பட்டால், இடஒதுக்கீட்டுடன் ஈ.டபிள்யூ.எஸ்யும் அனைத்து சமூகங்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். இதைத்தான் ஒவ்வொருவரும் எல்லா சமூகங்களுக்கும் சமமாக பொருளாதார நீதி எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருந்தார்.  இப்படி தொடர்ந்து பாஜகவை விமர்சிக்கும் காயத்திரி ரகுராமிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தமிழக பாஜக திணறி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.