சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவின் ஒருபகுதியாக பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் யார் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற தகவல் கசிந்துள்ளது.
அரண்மனை பால்கனியில்
எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி சனிக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் மொத்தம் 15 ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
@getty
இதில் மன்னர் சார்லஸ் ராணியார் கமிலா, இவர்களுடன் வில்லியம்- கேட் தம்பதி மற்றும் மூன்று பிள்ளைகள்.
இளவரசர் எட்வார்ட் மற்றும் அவரது மனைவி சோஃபி. இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ் ஆகியோருடன் மேலும் சில குடும்ப உறுப்பினர்கள் பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் காட்சியளிக்க இருக்கின்றனர்.
ஆனால் இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோருக்கு அந்த பட்டியலில் இடமளிக்கப்படவில்லை.
மே 6ம் திகதி துவங்கும் விழாவானது திங்கட்கிழமை வரையில் நீடிக்க உள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில்
சனிக்கிழமை பகல் மன்னர் சார்லஸ் மற்றும் ராணியார் கமிலா தம்பதி வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வருகை தருவதுடன் முடிசூட்டு விழாவிற்கான நிகழ்ச்சிகள் துவங்குகின்றன.
@getty
அதன் பின்னர் ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் ஊர்வலம் செல்ல இருக்கின்றனர். தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் தோன்ற உள்ளனர்.
மட்டுமின்றி, பிரித்தானியா முழுவதும் முக்கிய தெருக்களில் பொதுமக்களுக்கான விருந்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட இருக்கிறது.