கனடாவில் லாரன்ஸ் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் ரொறன்ரோ தம்பதி தொடர்பில் அதிரவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
நாடு கடத்தப்படும் நெருக்கடி
கனடா – அமெரிக்க எல்லையில் கடந்த வாரம் லாரன்ஸ் நதியில் இருந்து 8 புலம்பெயர் மக்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒன்று ரொறன்ரோ தம்பதி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
Facebook photos
இந்த ரொறன்ரோ தம்பதி தொடர்பில் அதிர்ச்சி தரும் பின்னணி வெளியாகியுள்ளது. ருமேனியாவுக்கு நாடு கடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்துள்ளார் புளோரின்.
வேறு வழியில்லை என்பதால் தமது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் அமெரிக்காவுக்கு புலம்பெயரும் கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
மார்ச் 29ம் திகதி கனடாவில் இருந்து புளோரின் குடும்பம் வெளியேற வேண்டும்.
இவர்களுக்கான விமான பயணச் சீட்டுகளும் அதிகாரிகள் தரப்பால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த நேரத்தில் இந்த தம்பதி விமான நிலையத்தில் காணப்படவில்லை.
புளோரின் தம்பதியின் பிள்ளைகள் இருவரும் கனடாவில் பிறந்தவர்கள், அவர்கள் கனடா குடிமக்கள். இதனால் அவர்கள் இருவரும் நாடுகடத்தப்படும் அறிக்கையில் இடம்பெறவில்லை.
திட்டம் தமக்கு தெரியாமல் போனது
இருப்பினும், பெற்றோர்கள் நாடுகடத்தப்படுவதை உறுதி செய்யவே, கனேடிய குடிமக்களான அந்த சிறார்களுக்கும் பயணச்சீட்டுகள் வாங்கப்பட்டுள்ளது.
ஆனால் புளோரின் தம்பதியின் திட்டம் தமக்கு தெரியாமல் போனது என்கிறார் அவர்களின் சட்டத்தரணி.
Facebook photos
2018ல் இருந்தே இவர்களுக்காக கனேடிய அதிகாரிகளிடம் போராடி வருபவர் குறித்த சட்டத்தரணி.
புளோரின் ஒருமுறை கூட தமக்கான எதிர்காலம் தொடர்பில் கவலைப்பட்டதில்லை எனவும், தமது பிள்ளைகள் இருவருக்காக மட்டுமே கவலை கொண்டுள்ளார் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தான் நடுங்கவைக்கும் தகவல் வெளியானதாகவும், இரண்டு கனேடிய கடவுச்சீட்டுடன் புளோரின் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட இந்திய நபர்கள் தொடர்பிலும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.