கொலம்பியா 70 ‘கோகைன் நீர்யானை’களை இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நீர்யானைகள் போதைப்பொருள் கடத்தல்காரர் பாப்லோ எஸ்கோபரின் தனியார் மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளில் அடங்கும். இந்த காரணத்திற்காக அவை கோகோயின் ஹிப்போஸ் என்று அழைக்கப்படுகின்றன. அவர்களை இடமாற்றம் செய்ய $3.5 மில்லியன் செலவாகும். கொலம்பிய விவசாய நிறுவனம், கொலம்பிய விமானப்படை மற்றும் மெக்சிகோவில் உள்ள ஆஸ்டாக் ரிசர்வ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் உள்ளூர் ஆண்டியோகுவியா அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சரணாலயம் 60 நீர்யானைகளை இந்தியாவில் உள்ள சரணாலயத்திற்கு அனுப்பி வைக்க உள்ளது.
நீர் யானைகளின் எண்ணிக்கை
நீர்யானைகள் பாப்லோ எஸ்கோபரின் பிரதேசத்தின் வழியாக வயலில் வெகு தொலைவிற்கு பரவியுள்ளன. நீர்யானைகளின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்,. இருந்தபோதிலும் நீர் யானைகளின் எண்ணிக்கை 130-160 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக நீர்யானைகள் 1980 களில் பாப்லோ எஸ்கோபார் கட்டப்பட்ட விலங்குகளின் மிருகக்காட்சிசாலையின் முக்கியமான விலங்குகளாக இருந்தன. 1993 இல் அவரது மரணத்திற்குப் பிறகு, பெரும்பாலான விலங்குகள் அதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்பட்டன. ஆனால் அளவில் மிக பெரியதாக இருப்பதால், சிரமம் காரணமாக நீர்யானைகளை அகற்றவில்லை.
இந்தியாவுக்கு வரும் நீர்யானைகள்
அப்போதிருந்து, இந்த நீர்யானைகளின் எண்ணிக்கை வேகமாகப் பெருகின. அவை உள்ளூர் மக்தலேனா நதியின் படுகையில் விரிவடைந்தது. நீர்யானைகள் விரைவில் உள்ளூர் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் சுற்றுச்சூழல் சவாலாக மாறியது. 10 நீர்யானைகள் மெக்சிகோவிற்கு அனுப்பப்படும். இந்தியாவில் உள்ள ஒரு சரணாலயத்திற்கு 60 நீர்யானைகள் வரும். இந்த நீர்யானைகளை அவற்றின் சொந்த நாடான ஆப்பிரிக்காவுக்கு கொண்டு செல்வது சாத்தியமில்லை. உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பு அதற்உ எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | தாயின் உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த நபர்!
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நீர்யானைகள்
நீர்யானை கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிகவும் செலவு அதிகமாக இருப்பதற்கான காரணம் பற்றி கூறுகையில், நீர்யானைகளை கொண்டு செல்வதற்கான விமான போக்குவரத்து செலவு மற்றும் அதற்கான பெட்டிகளை உருவாக்குவதற்கான செலவை ஈடுகட்ட வளங்கள் ஒதுக்கப்படும். கொலம்பியாவின் நீர்யானைகள் உள்ளூர் விவசாயத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இது தவிர, நீர்யானையின் கழிவு நீர் ஆக்ஸிஜன் அளவை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான மீன்களும் இறக்கும் அபாயம் உள்ளது. சுற்றுச்சூழலைப் போலவே நீர்யானையின் உயிரையும் காக்க விரும்புகிறோம் என்று ஆண்டியோகியா துறையின் ஆளுநர் அனிபால் கவிரியா கூறுகிறார்.
மேலும் படிக்க | உயிருடன் எரிக்கப்பட்ட 1,60,000 பேர்; கால் வைக்கும் இடமெல்லாம் மனித எலும்புகள்!
மேலும் படிக்க | மரணம் நெருங்கும் போது ஏற்படும் உணர்வுகள் என்ன… ஆஸ்திரேலியாவில் ஒரு பகீர் அனுபவம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ