Rahul Dev: மூளையை வீட்டில் வைத்துவிட்டுத் தான் தென்னிந்திய படங்களில் நடிப்பேன்: அஜித் பட வில்லன்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
கடந்த 2000ம் ஆண்டு வெளியான சேம்பியன் இந்தி படம் மூலம் நடிகரானவர் ராகுல் தேவ். அர்ஜுனின் பரசுராம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். ஜெயம் ரவியின் மழை, ராகவேந்திரா லாரன்ஸின் முனி, சூர்யாவின் ஆதவன், அஜித் குமாரின் வேதாளம், லெஜண்ட் சரவணின் தி லெஜண்ட் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

அவர் இந்தி, தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, ஒடியா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். படங்கள் தவிர்த்து இந்தி தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் ராகுல் தேவ்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தென்னிந்திய சினிமா பற்றி ராகுல் தேவ் கூறியது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.

பவன் கிர்பாலனி இயக்கத்தில் சாரா அலி கானுடன் சேர்ந்து ராகுல் தேவ் நடித்த கேஸ்லைட் படம் அண்மையில் வெளியானது. அந்த படத்தில் எஸ்.பி. அசோக் தன்வாராக நடித்திருக்கிறார் ராகுல். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுலிடம் தென்னிந்திய சினிமாக்களில் நடிப்பது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது,

தென்னிந்திய படங்கள் நன்றாக ஓடுகின்றன. அந்த படங்களில் வரும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்காது. நான் படித்த குடும்பத்தில் இருந்து வந்தவன். அதனால் தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் போது மூளையை வீட்டில் விட்டுவிட்டு செல்ல வேண்டியதாக இருக்கிறது.

தென்னிந்திய சினிமாக்களில் காட்டுவது போன்று நிஜ வாழ்க்கையில் இரண்டு பேர் சண்டை போடும்போது சட்டையை கழற்றி உடம்பை காட்ட மாட்டார்கள்.

கமர்ஷியல் ஆங்கிளில் பார்க்கும்போது அந்த காட்சியில் எந்த தவறும் இல்லை. பலருக்கு அத்தகைய காட்சிகளை பார்க்க பிடித்திருக்கிறது. கற்பனையை பலவிதமாக வெளிப்படுத்தலாம். அதனால் எது சரி, எது தவறு என நாம் முடிவு செய்துவிடக் கூடாது.

தென்னிந்திய சினிமாக்கள் 70ஸ் மற்றும் 80ஸ் டெம்பிளேட்டை பின்பற்றினாலும் ரசிகர்களிடையே பெரிய ஹிட் ஆகும். கதை சொல்லும் விதம் ரசிகர்களை கவர்கிறது. ரசிகர்களை கவரும் தென்னிந்திய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

Ajith, Vijay: அஜித், விஜய் பற்றி முருகதாஸே இப்படி சொல்லிட்டாரே: ரசிகர்கள் கவலை

மூளையை வீட்டில் வைத்துவிட்டு வந்து தென்னிந்திய சினிமாக்களில் நடிப்பேன் என்று ராகுல் தேவ் கூறியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

ராகுல் தேவ் சார், நீங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு தென்னிந்திய சினிமாக்களில் நடிக்க வேண்டாம். மூளையை வீட்டில் விடாமல் எங்கு நடிக்க முடியுமோ அங்கு போய் நடித்துக் கொள்ளுங்கள். உங்களின் கெரியர் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளனர்.

ராகுல் தேவின் அப்பா ஹரி தேவ் முன்னாள் துணை கமிஷனர் ஆவார். மேலும் ராகுலின் சகோதரர் முகுல் தேவும் ஒரு நடிகர். அவர் இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.