சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ T2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனின் வடிவமைப்பு கேம் பிரியர்களை கவரும் என சொல்லப்படுகிறது.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் T2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.38 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 4,500mAh பேட்டரி
- 44 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- பின்பக்கத்தில் ட்யூயல் கேமரா செட்-அப். அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 6ஜிபி/8 ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது
- 6ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.18,999
- 8ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ.20,999
Now live your #TurboLife with the all-new vivo T2 5G Series.
Sale starts on 18th April 2023. Know more : https://t.co/Wx4Bvkpulx#GetSetTurbo #vivoT2Series #5G pic.twitter.com/J3J7tjpjEl
— vivo India (@Vivo_India) April 11, 2023