இலங்கையில் உள்ளாட்சி தேர்தல்: நிதி இல்லை என அரசு கைவிரிப்பு| Local elections in Sri Lanka: No funding, government hand out

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நிதி இல்லாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அன்னியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் ‘காஸ்’ விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுடன், மின் வெட்டும் இலங்கை மக்களை வாட்டி வதைக்கிறது.

latest tamil news

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பொருளாதார நெருக்கடியை தடுக்க தவறியதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது; 45 பேர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து இருவரும் பதவி விலகினர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் வரும் 25-ம் தேதி நடத்தி தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்தது. அரசை நடத்த நிதியின்றி தள்ளாடி வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த போதிய நிதி இல்லை என கூறப்பட்டதால், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதாகவும், தேர்தல் கமிஷனர் சமன் ஸ்ரீ ரத்நாயகே கூறினார்.

Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.