புதுடில்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமையிலான அமர்வு, தினசரி 100 அவசர வழக்குகளை விசாரிக்கிறது.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இன்று (ஏப்.,11)ம் தேதி வழக்கறிஞர் ஒருவர், தனது மனு மீதான விசாரணை, ஏப்.,17ம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், அதை, வேறு ஒரு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என, குறிப்பிட்டார்.
இதனால், கோபமடைந்த தலைமை நீதிபதி சந்திரசூட், ‛17ம் தேதிக்கு உங்கள் மனு பட்டியலிடப்படும் எனக்கூறப்பட்ட பின், அதற்கு முந்தைய தேதியில் மனுவை விசாரிப்பதற்காக, வேறொரு பெஞ்சுக்கு மாற்ற, நீங்கள் விரும்புகிறீர்களா?,’ என, கடிந்து கொண்டார்.
நீதிபதியின் கோபத்தை உணர்ந்த, வழக்கறிஞர் வருத்தம் தெரிவித்தார். இதை தொடர்ந்து, அவரை மன்னிப்பதாக கூறிய, தலைமை நீதிபதி, ‛எனது, அதிகாரத்தை நீங்கள், குழப்ப வேண்டாம்,’ என, எச்சரித்தார்.
Advertisement