வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினின் கண்பார்வை மங்கியதாகவும், நாக்கு உணர்ச்சியற்று போனதாகவும் அவரது மருத்துவ அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு மே மாதம் ரஷ்ய அதிபர் புடினின்,69 உடல் நிலை குறித்து பல்வேறு விதமான யூகங்களை வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அவரது தோற்றத்தை வைத்தும் உடல்நிலை பாதிப்பு குறித்து செய்தி வெளியாகின. வயிற்று புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோய் பாதிப்பால் புடின் அவதியடைந்து வருவதாக செய்திகள் வெளியாயின.
இதையடுத்து தனது நெருங்கிய நண்பர் நிகோலய் பத்ருஷோவிடம் ஆட்சியை ஒப்படைக்க போவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவரது மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் புடினுக்கு கண்பார்வை மங்கிவிட்டது, அவரது நாக்கு உணர்ச்சியற்று சுவை அறிய முடியாத நிலைக்கு சென்று விட்டது. நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகள் அவர் உயிருடன் இருப்பார்.இவ்வாறு அந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement