காதலனை கடத்தி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலி!!

முதல் காதலனை கடத்தி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்து அதை வீடியோ எடுத்த காதலியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் வர்க்கலா பகுதியை சேர்ந்த லட்சுமி பிரியா (19) என்ற இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரும் காதலித்தனர்.

இந்நிலையில் லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் இன்னொரு மாணவருடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த மாணவரை லட்சுமிபிரியா காதலிக்க தொடங்கினார். இதனால் முதல் காதலனை சந்திப்பதை தவிர்த்தார்.

முதல் காதலன் லட்சுமி பிரியாவை தொடர்ந்து சந்திக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா முதல் காதலனை சந்திக்க வருமாறு அழைத்தார். அவர்சென்று போது, பெண்ணுடன் 2-வது காதலனும் இருந்தார்.

இருவரும் அவர்களின் நண்பர்களின் துணையுடன் முதல் காதலனை சரமாரியாக தாக்கி ஒரு காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவரை அரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்தனர்.

பின்னர் அந்த இளைஞரின் செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதனிடையே மகனை காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் செய்தார்.

வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடிய போது, அவர் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் காதலி கடத்தியது தெரியவந்தது.

செல்போன் சிக்னல் மூலம் அந்த பெண் எர்ணாகுளம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரது 2-வது காதலன் மற்றும் நண்பர்கள் தலைமறைவாக உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.