தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. மானியக் கோரிக்கையில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் ஐபிஎல் போட்டிகளைக் காண எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் வழங்கப்பட்டதாகவும் தற்போது திமுக ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு இதேபோல் பாஸ் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளே நடைபெறாத நிலையில் 400 […]