இந்தியாவின் பிரசத்தி பெற்ற எம்பிவி ரக மாடலான டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இடம்பெற்றுள்ள உயர் ரக ZX மற்றும் ZX(O) வேரியண்டுகளுக்கான காத்திருப்பு காலம் 24 மாதம் முதல் 30 மாதம் வரை உயர்ந்துள்ளதால், தற்காலிகமாக முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
இன்னோவா ஹைகிராஸ் காரில் மொத்தம் ஆறு டிரிம்களில் கிடைக்கிறது. அவை G, GX, VX, VX(O), ZX மற்றும் ZX(O) ஆகும். ஹைப்ரிட் அல்லாத பெட்ரோல் இன்ஜின் பெற்ற வேரியண்டுகள் G மற்றும் GX டிரிம்களில் மட்டுமே கிடைக்கும், அதே சமயம் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் VX டிரிமில் இருந்து வழங்கப்படுகிறது. ZX மற்றும் ZX(O) டிரிம்கள் 7 சீட்டர் மட்டுமே கிடைக்கின்றன, மற்ற அனைத்து வகையிலும் 7- மற்றும் 8-சீட்டர் கிடைக்கின்றன.
Innova Hycross
இன்னோவா ஹைக்ராஸ் காரில் 172 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 184 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்களும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் – CVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.
இன்னோவா ஹைக்ராஸ் ஹைபிரிட் மைலேஜ் 23.24kpl மற்ற சாதாரன என்ஜின் மைலேஜ் 16.13kpl என உறுதிப்படுத்தியுள்ளது.
பொதுவாக குறைந்த விலை வேரியண்டுகள் மூன்று முதல் ஆறு மாதங்களும், VX மற்றும் VX(O) வேரியண்டுகள் நான்கு முதல் பத்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.