தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி| Supreme Court allows RSS to hold rally in Tamil Nadu

புதுடில்லி: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை எங்களின் பேரணியை தடுத்து நிறுத்துவது நியாயம் இல்லை என்ற ஆர்எஸ்எஸ் தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்றனர்.

அடையாளம் காட்டப்படும் இடங்கள் மற்றும் பல கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கலானது. இதனை ஏற்ற ஐகோர்ட் பேரணி நடத்த அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு, சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரணி விவகாரத்தில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது. நிலைமையை கருத்தில் கொண்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி தரப்பட்டது. பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை. பிரச்னைகள் உள்ள இடங்களில் தான் அனுமதி மறுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் கடமை. அதில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. எனக்கூறினார்.

latest tamil news

சென்னை ஐகோர்ட் அனைத்து விவரங்களையும் ஆய்ந்த பின்னரே பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது, இதனை குறைத்து மதிப்பிட முடியாது, ஆனால் இதனை தமிழக அரசு ஏற்க மறுப்பது நீதிதுறையை கேலிக்கூத்தாக்கும் செயல். நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்து வருவது ஒரு வழக்கமான விஷயம். இதில் மாநில அரசு தலையிட்டு எங்களை அடக்கி வைப்பது நியாயமற்றது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமைதான் என வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு சென்னை ஐகோர்ட் வழங்கிய அனுமதியை ஏற்று கொண்டதுடன், தமிழக அரசின் அப்பீலை தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவை அடுத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த அனுமதி கிடைத்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்த அறிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.