லண்டன்:
தினமும் மது அருந்தி வந்த வளர்ப்பு நாய் ஒன்று திடீரென அந்த பழக்கத்தை கைவிட நேர்ந்ததால் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
மனிதன் ஆனாலும் சரி.. மிருகம் ஆனாலும் சரி.. மது பழக்கத்துக்கு அடிமையானால் ஆபத்து என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
சிலரை நாம் பார்த்திருப்போம். பெரிய சோஷலிச சிந்தனையாளர்கள் என நினைத்துக் கொண்டு தாங்கள் மது அருந்தும் போது தங்கள் வளர்ப்பு நாய்களுக்கும், பூனைகளுக்கும் மதுவை குடிக்க கொடுப்பார்கள். தனது உடலையும் கெடுப்பதோடு, ஒன்றுமறியாத அந்த வாயில்லா ஜீவன்களின் வாழ்க்கையையும் இவர்கள் சின்னாபின்னமாக்கி விடுகிறார்கள். இப்படியொரு சம்பவம்தான் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
தினமும் மது விருந்து
இங்கிலாந்தில் உள்ள டேவான் நகரத்தைச் சேர்ந்தவர் டோனி டக்கர். 80 வயது. இவரது மனைவி இறந்துவிட்டார். பிள்ளைகள் திருமணம் முடிந்து தனியே சென்றுவிட்டனர். இதனால் தனிமையில் இருந்த டோனி டக்கர், தனது வீட்டில் கொக்கோ, பிரின்ஸ் என்ற 2 நாய்களை வளர்த்து வந்தார். அவை லேப்ரடார் வகையை சேர்ந்தவை. இவருக்கு ஒரு பழக்கம் இருந்துள்ளது. தினமும் இரவு மது அருந்தும் டோனி, தனது நாய்களுக்கும் ஒரு கிண்ணத்தில் மது ஊற்றி கொடுத்துள்ளார். அந்த நாய்களும் அதை குடித்துவிட்டு போதையில் படுத்துவிடும்.
இறந்துபோன உரிமையாளர்
இப்படி 5 வருடங்களாக நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் முதியவர் டோனி டக்கர் உயிரிழந்தார். அதையடுத்து, அவரது வளர்ப்பு நாய்களான கொக்கோவும், பிரின்ஸும் அங்கிருந்த விலங்குகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே அந்த நாய்கள் விசித்திரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடந்து கொள்ள தொடங்கியது. உணவு உண்ண மறுத்தன. அடுத்த சில தினங்களில் அவற்று வலிப்பும் ஏற்பட தொடங்கின.
ரத்தத்தில் கலந்தது “மது”
இதுவரை இதுபோன்ற பாதிப்புகளை எந்த நாய்களிலும் பார்த்திராத அந்த காப்பகத்தைச் சேர்ந்தவர்கள், அவற்றை விலங்குகள் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த நாய்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்ததில் அவற்றின் ரத்தத்தில் ஆல்கஹால் இருப்பது தெரியவந்தது. அப்போதுதான் மருத்துவர்களுக்கு விஷயமே புரிந்துள்ளது. தொடர்ந்து மது அருந்தி வந்த நாய்கள், திடீரென அந்த பழக்கத்தை கைவிட நேர்ந்ததால் அவற்றுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
தாக்கியது கேன்சர்.. மரணிக்கும் முன் மனைவிக்காக மருத்துவர் செய்த காரியம்.. இப்படியும் ஒரு மனிதரா..?
பரிதாபம்
இதையடுத்து, அந்த நாய்களுக்கு சிகிச்சை கொடுக்க தொடங்கினார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரின்ஸ் உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து, கொக்கோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனிதன் செய்த தவறால் அப்பாவி நாய்களுக்கு ஏற்பட்டிருக்கும் விபரீதத்தை பார்த்து மருத்துவர்கள் கலங்கி போயுள்ளனர். இதை படித்தாவது, தங்கள் செல்லப் பிராணிகளுக்கு மது ஊற்றி கொடுக்கும் பழக்கம் உடையவர்கள், அதை நிறுத்துவது நல்லது. அவ்வாறு நிறுத்தும் போது அந்த பிராணிகளிடம் ஏதேனும் பாதிப்பு தெரிந்தால் அவற்றை விலங்குகள் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டியது அவசியம்.