உலகிலேயே முதல்முறையாக புகை பிடிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம் என்பது அதனை பிடிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல், அருகே இருப்போர், சுற்றுச்சூழல், குடும்பம் என அனைத்தையும் ஒருசேர பாதிக்கிறது. அதனால் புகைப்பழக்கம் என்பதை தனிமனித கேடாக நினைக்க முடியாது.
எனவே தான் புகைப்பழகத்தை கைவிட உலகம் முழுவதும் உள்ள நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அரசு புகைப்பழக்கம் உள்ளவர்களை அதிலிருந்து மீட்க புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, புகைப்பழக்கத்தை கைவிடும் வகையில், அதனை கைவிட உதவும் கருவியை இலவசமாக 10 லட்சம் பேருக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
அதைவிட முக்கியமாக, புகைப்பழக்கத்தை கைவிடும் கர்ப்பிணிகளுக்கு 400 பவுண்ட் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
newstm.in