மாஸ்கோ,:கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, உணர்ச்சியற்ற நாக்கு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல்நிலை குறித்த தகவல்கள், எப்போதும் விவாதப் பொருளாகவே இருக்கும்.
அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்து அதிர்ச்சித் தகவல்களும் வந்தபடியே இருக்கும்.
இந்நிலையில், கடுமையான தலைவலி, மங்கலான பார்வை, உணர்ச்சியற்ற நாக்கு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வலது கை மற்றும் காலில், பகுதியளவு உணர்வை அதிபர் விளாடிமிர் புடின் இழந்துள்ளதாகவும், அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு டாக்டர்கள் முதலுதவி அளித்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Advertisement