கடந்த மார்ச் 2023 மாதாந்திர விற்பனையின் முடிவில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் முதலிடத்திலும், டாப் 10 கார்களில் 7 இடங்களை பிடித்துள்ளது. குறிப்பாக பீரிமியம் மாருதி கிராண்ட் விட்டாரா கார் 10,045 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
மாருதியை தொடர்ந்து முதல் 10 இடங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் பஞ்ச் உட்பட அடுத்தப்படியாக ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி காரும் உள்ளது.
டாப் 10 கார்கள் – மார்ச் 2023
டிசையர் காரின் விற்பனை முந்தைய மாதத்தை விட சற்று குறைவான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. ஸ்விஃப்ட் கார் மார்ச் 2023 மாத முடிவில் 17,559 ஆக பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் பிரெஸ்ஸா, நெக்ஸான், கிரெட்டா, டாடா பஞ்ச் மற்றும் கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட எஸ்யூவி மாடல்கள் இடம்பெற்றுள்ளது.
SL.NO | Models | Units |
1 | Maruti Suzuki Swift | 17,559 |
2 | Maruti Suzuki WagonR | 17,305 |
3 | Maruti Suzuki Brezza | 16,227 |
4 | Maruti Suzuki Baleno | 16,168 |
5 | Tata Nexon | 14,769 |
6 | Hyundai Creta | 14,026 |
7 | Maruti Suzuki Dzire | 13,394 |
8 | Maruti Suzuki EEco | 11,995 |
9 | Tata Punch | 10,894 |
10 | Maruti Suzuki Grand Vitara | 10,045 |
இந்த மாதமும் பிரெஸ்ஸா காரின் விற்பனை எண்ணிக்கை கூடுதலாக அமைந்துள்ளது. நெக்ஸான் மாடலை விட சற்று கூடுதலாக பதிவு செய்துள்ளது.