வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் பாராட்டை பெற்றது.
அதேபோல் இந்த படம் வசூலிலும் நல்ல ரிசல்டை தருவதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி ஒரு வாரத்தில் 20 கோடி ரூபாய் வசூலை தமிழகத்தில் தாண்டி உள்ளது.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் தமிழகத்தில் 22 கோடி ஷேர் தொகை கொடுத்தது. இந்த நிலையில் விடுதலை, திரைப்பட வர்த்தகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான வசூலை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் இந்த தொகை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது அசுரன் ஷேர் தொகையை நெருங்க வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
newstm.in