கடைசி நேரத்தில் ஏர்போர்ட்டில் நடந்த 'ட்விஸ்ட்'.. எடப்பாடி ‘பலூன்’.. உடைத்த 2 பேர்.. சுதாரித்த மோடி!?

சென்னை : தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ் – எடப்பாடி இருவரையும் தனித்தனியாகச் சந்திக்க நேரம் ஒதுக்கியதாக கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு கேன்சல் ஆனது. வரவேற்று, வழியனுப்பியதோடு, ஓபிஎஸ் – ஈபிஎஸ் உடன் பிரதமர் மோடி தனியாகப் பேசவில்லை. இது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியில் தனது செல்வாக்கை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து இருந்தாலும் கூட, ஓபிஎஸ் உடன் ஒரே தட்டில் வைத்தே எடப்பாடி பாஜக தலைமையால் மதிக்கப்படுகிறாரா என்ற கேள்வி உள்ளது. பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி கல்தா கொடுத்துவிடுவார் என்றே பாஜக தலைமை கருதுகிறது என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், “பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையுமே 50-50 எனத்தான் ட்ரீட் செய்திருக்கிறார். இன்று நாங்கள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் பேசமாட்டோம், டெல்லி தலைமையுடன் தான் பேசுவோம் என்கின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்குப் பின்னால் நின்றுதானே சந்தித்தார்.” என்கிறார்.

 Political critic explains about Why pm modi did not meet edappadi palanisamy

மோடி எதிர்ப்பாளர்கள் : மேலும் பேசியுள்ள ரவீந்திரன் துரைசாமி, “ஓ.பன்னீர்செல்வத்திடம் வெறும் 4 எம்.எல்.ஏக்கள் தான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்குப் பின்னால் 62 எம்.எல்.ஏக்கள், முக்கியமான நிர்வாகிகள் இருந்தாலும் அவருக்கும் சமமான மரியாதை தான் கொடுக்கிறது டெல்லி தலைமை. எடப்பாடி பழனிசாமி பக்கம் மோடி எதிர்ப்பாளர்களும் பலர் இருக்கிறார்கள். ஜெயலலிதா, மோடியா லேடியா என்று கேட்டதை பெருமையாகச் சொல்லக்கூடிய பலர் ஈபிஎஸ் அணியில் இருக்கிறார்கள். பாஜகவை காலி செய்வதற்காகத்தான் ஓபிஎஸ்ஸை வெளியேற்றி இருக்கிறார்கள்.

 Political critic explains about Why pm modi did not meet edappadi palanisamy

சுமார் 15% கிறிஸ்தவர் + முஸ்லீம் ஓட்டுகள் பாஜக கூட்டணி காரணமாக அதிமுகவுக்கு விழவில்லை என்பதாலேயே தோற்றோம் என சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கருதுகின்றனர். மத்திய அரசையும், மாநில அரசையும் போல்டாக எதிர்த்துப் பேசி வருகிறார் சி.வி.சண்முகம். அவருக்கு விழுப்புரம் தாண்டி வட தமிழ்நாடு முழுவதும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. அவர் திமுக + பாஜக கூட்டணி என்று சொல்லும்போது சைலண்டாக தானே இருந்தார் எடப்பாடி.

 Political critic explains about Why pm modi did not meet edappadi palanisamy

கார்டை மறைத்து ஆடும் எடப்பாடி : எடப்பாடி பழனிசாமி கார்டை மறைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ், விசிகவை எதிர்பார்த்து மெகா கூட்டணி என்கிறார் ஈபிஎஸ். பாஜகவும், பாமகவும் மைனஸ் என்ற சி.வி.சண்முகத்தின் கருத்து ஈபிஎஸ்ஸின் கருத்து தான். இந்த மைனஸ்களை தள்ளிவிட்டு காங்கிரஸ், விசிக பிளஸ் என்று அந்தப் பக்கம் நகர்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஈபிஎஸ்ஸிடம் எத்தனை சீட்கள் வாங்கினாலும், திமுகவில் ஒரு சீட் கிடைத்தாலும் உறுதியான எம்.பி சீட் என்ற புள்ளியில் திருமாவளவனும் பிடிகொடுக்கவில்லை.

 Political critic explains about Why pm modi did not meet edappadi palanisamy

எடப்பாடி பழனிசாமி, ‘மெகா கூட்டணி’ என பறக்கவிட்ட பலூனை காங்கிரஸின் கே.எஸ்.அழகிரியும், விசிக தலைவர் திருமாவளவனும் உடைத்துவிட்டனர். எடப்பாடி பழனிசாமியின் உள்ளக்கிடக்கை என்ன? பாமகவை திமுக கூட்டணியில் ஸ்டாலின் சேர்த்துக்கொள்வார், ஆனால், 10.5% இட ஒதுக்கீடு கொடுத்ததால் வன்னியர் சமூக வாக்குகள் தன் பக்கம் நின்று விடும். அதோடு விசிகவையும் சேர்த்து அந்த வாக்குகளையும் பெற்றுவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார். அது நிச்சயம் நிறைவேறாது” எனத் தெரிவித்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.