கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முதற்கட்டமாக 189 வேட்டபாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஏப்ரல் 21ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 24 கடைசி நாள். இந்த முதற்கட்டமாக 189 வேட்டபாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவரது தொகுதியான ஷிகாம்வ தொகுதியில் போட்டியிடுகிறார்.
அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் 52 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 32 பேரும், பட்டியல் இனத்தவரில் 20 பேரும், பட்டியல் பழங்குடியினரில் 16 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
ஒப்பந்ததாரர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரப்பா, இந்த முறை தேர்தலில் போட்டியிட வில்லை என்று தெரிவித்துள்ளார்.
newstm.in