நாக்கில் கிஸ்.. சிறுவனிடம் அத்துமீறிய தலாய் லாமா.. ‘விளையாட்டா செஞ்சேங்க’.!

புத்த மத தலைவரான தலாய் லாமா சிறுவனிடம் அத்துமீறிய வீடியோ வைரலான நிலையில், பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

தலாய் லாமா சர்ச்சை

கடந்த 2019 ஆம் ஆண்டில், திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமா, “ஒரு பெண் தலாய் லாமாவாக ஆக வேண்டும் என்று விரும்பினால், அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பது முதல் விதி” என்று அவர் கூறினார். இது உலகம் முழுவதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய, பின்னர் அவர் தனது சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டார்.

நாக்கில் முத்தமிடு

இந்தசூழலில் மீண்டும் தலாய் லாமா சர்ச்சையில் சிக்கியுள்ளார். சிறுவனை உதட்டில் முத்தமிட வைப்பதும், நாக்கில் முத்தமிட அவர் சொல்லும் வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வைரலானது. வீடியோவில் திபெத் பௌத்த துறவி நாக்கில் முத்தமிடுமாறு தனது நாக்கை வெளியே நீட்டியவாறு காணப்படுகிறார். “என் நாக்கை முத்தமிட முடியுமா” என்று அந்த சிறுவனிடம் அவர் கேட்பது வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. குழந்தைகள், மைனர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளும் தலாய் லாமாவை கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.

சின்மயி

சினிமா பின்னணி பாடகி சின்மயி இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ‘‘இது நேரடியான குழந்தை மீதான பாலியல் அத்துமீறல். மதம் சார்ந்து இயங்கும் ஆண்கள் உலகில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து மக்களிடமும் அத்துமீறுகிறார்கள். அவர்களில் ஒருவராக தாலாய்லாமாவும் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. இதுதான் இவரது ஒரிஜினல் குணம் என்றால் இன்னும் நிறைய துறவிகள் இவரால் பாதிக்க பட்டிருப்பார்கள்’’ என்று தனது அதிருப்தியை தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்டார்

இது குறித்து தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், ‘‘சமீபத்தில் நடந்த சந்திப்பில், ஒரு சிறுவனை தலாய் லாமா தன்னை கட்டிப்பிடிக்க முடியுமா என்று கேட்டதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சிறுவன் மற்றும் அவனது குடும்பம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நண்பர்களிடமும், எனது வார்த்தைகள் ஏற்படுத்திய காயத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

பொது இடங்களிலும் கேமராக்களுக்கு முன்பும் கூட, என்னை சந்திக்கும் நபர்களை எந்த உள்நோக்கமும் மற்றும் விளையாட்டுத்தனமான முறையில் அடிக்கடி கிண்டல் செய்வேன். அது போல இதுவும். இருப்பினும் பலரது மனதை துன்புறுத்தியதால் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்’’ என்றார்.

யார் இந்த தலாய் லாமா.?

கடந்த 1959ம் ஆண்டில் திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை தொடர்ந்து பல்வேறு திபெத்தியர்கள் உலகெங்கிலும் தஞ்சமடைந்தனர். அந்தவகையில் கடந்த 1959ம் ஆண்டில் இந்தியாவில் தஞ்சமடைந்தார் புத்த மத தலைவரான தலாய் லாமா. கடந்த 1935ம் ஆண்டு திபெத்தில் பிறந்த தலாய்லாமாவிற்கு தற்போது 87 வயது ஆகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தியாவில் வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.