பிடிச்சிருக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விசாகா சிங். ஆனாலும், சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் தான் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. மீண்டும் கண்ணா லட்டு தின்ன ஆசையா கூட்டணியான சந்தானம், சேது ஆகியோருடன் இணைந்து வாலிப ராஜா படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகும் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் விசாகா சிங் நடித்திருக்கிறார். இந்த நிலையில் விசாகா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், என்னால் நீண்ட நேரம் வெளியில் இருக்க முடியாது. காலநிலை மாற்றத்தால் அடிக்கடி வினோதமான நிகழ்வுகள் நடந்து, விபத்து, உடல் நிலை பிரச்னைகள் குளிர்காலம், வசந்த காலத்தை கடந்துள்ளேன்.
தற்போது ஆரோக்கியமான கோடை காலம் வந்துள்ளது. ஏப்ரல் எனக்கு உண்மையான புத்தாண்டு போல இருக்கிறது. ஒருவேளை இது புதிய நிதி ஆண்டு அல்லது எனது பிறந்த நாள் மாதம் என்பதால் இருக்கலாம். கோடை நாட்களை நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறிவருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு என்ன பிரச்னை என அவர் குறிப்பிடவில்லை. எதுவாக இருந்தாலும் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.