காபூல் : ஆப்கானிஸ்தானில் தலை மற்றும் முகத்தை மறைக்கும் ‘ஹிஜாப்’ அணியாமல் வரும் முஸ்லிம் பெண்களை வெளிப்புற உணவகங்களுக்கு செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை 2021ல் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
‘ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாது; பல்கலை உடற்பயிற்சி கூடங்கள் வேலைக்குச் செல்லக்கூடாது’ உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன.
இந்நிலையில் ஹெராத் மாகாணத்தில் திறந்தவெளி உணவகங்களுக்கு ஹிஜாப் அணியாமல் வரும் பெண்களுக்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘பூங்காக்களுடன் கூடிய திறந்தவெளி உணவகங்களில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் வந்துசெல்கின்றனர். அவ்வாறு வரும் பெண்களில் பலர் ஹிஜாப் அணியாமல் வருவதுடன் ஆண்களுடன் சகஜமாக பேசுகின்றனர். இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என ஹெராத் மாகாண அரசு அறிவுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement