கடந்த 2022- 2023 ஆம் நிதியாண்டில் எலக்ட்ரிக் கார் மற்றும் எஸ்யூவி விற்பனை 153 % அதிகரித்து ஒட்டுமொத்தமாக 47,102 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது. நாட்டின் முதன்மையான மின்சார கார் தயாரிப்பாளராக டாடா மோட்டார்ஸ் விளங்குகின்றது.
அடுத்தப்படியாக, சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்ஜி மோட்டார் நிறுவனம் 4,511 கார்களை விற்பனை செய்துள்ளது. BYD, ஹூண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ , பிஎம்டபிள்யூவி மற்றும் சிட்ரோன் இடம்பெற்றுள்ளது.
டாப் 10 எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எஸ்யூவி மூலமாக இந்தியாவின் எலக்ட்ரிக் கார் சந்தையை 81 சதவீத அளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிறுவனம் 2023 ஆம் நிதி வருடத்தில் மொத்தமாக 38,322 கார்களை விற்பனை செய்துள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக எம்ஜி மோட்டார் நிறுவனம், 4,511 மின்சார்களை விற்பனை செய்து பட்டியலில் உள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில் MG ZS EV என்ற காரை விற்பனை செய்து வரும் நிலையில் கூடுதலாக காமெட் இவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மூன்றாம் இடத்ததில் உள்ள BYD சீன நிறுவனம் இந்தியாவில் பிரீமியம் எலக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகின்றது. கடந்த நிதியாண்டில் சுமார் 1066 கார்களை விற்பனை செய்துள்ளது.
புதிதாக சிட்ரோன் வெளியிட்ட குறைந்த விலை இசி3 கார் 202 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனம் 463 வாகனங்களும், ஹூண்டாய் இந்தியா 789 மின்சார கார்களையும் விற்பனை செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் 247 கார்களும், மற்ற நிறுவன மின்சார கார்களின் மொத்த விற்பனை 664 ஆக உள்ளது.
TOP 10 EV sales – FY 2023
SL.NO | Makers | Units |
1 | TATA Motors | 38,322 |
2 | MG Motor | 4,511 |
3 | BYD | 1066 |
4 | Hyundai | 789 |
5 | Mahindra | 463 |
6 | BMW | 386 |
7 | KIA | 312 |
8 | Mercedes Benz | 247 |
9 | Ctroen | 202 |
10 | Volvo | 140 |
11 | others | 664 |