இந்து கடவுளை அவமதித்த விவகாரம்: லீனா மணிமேகலை மீதான வழக்குகள் டில்லிக்கு மாற்றம்
செங்கடல், மாடத்தி திரைப்படங்களையும், மாத்தம்மா உள்ளிட்ட பல ஆவணப்ப படங்களையும் இயக்கியவர் லீனா மணிமேகலை. அவர் தற்போது இயக்கி வரும் ஆவணப்படம் 'காளி'. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கு போஸ்டரை லீனா வெளியிட்டிருந்தார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த ஒரு பெண் புகைபிடிப்பது போன்றும் அவருக்கு பின்னணியில் தன்பால் ஈர்ப்பாளர்கள் கொடி பிடித்து நிற்பது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த போஸ்ட்டருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. லீனா மணிமேலை மீது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குளை ரத்து செய்ய வேண்டும் என்று லீனா மணிமேகலை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பென்ஞ் மனுவை ஆய்வு செய்து பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குள் அனைத்தையும் ஒரே வழக்காக டில்லி மாற்றி உத்தரவிட்டனர். அதோடு காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யாமல் லீனாவை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். வழக்கை ரத்து செய்யும் மனுவை லீனா டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.