கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
படிவத்தில் தகவல்களை நிரப்பி, அதன் அச்சு பிரதி எடுத்து தேர்தல் அதிகாரியிடம் அதை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். டெபாசிட் தொகையை ஆன்லைன் அல்லது நேரில் செலுத்தலாம்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20ஆம் தேதி கடைசி நாள். 21ஆம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற உள்ளது. 24ஆம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in