புதுடெல்லி,
உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிப்பது தொட்ரபாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்திருப்பது போல், உரிமம் பெறாமல் துப்பாக்கி வைத்திருக்க நமது நாட்டில் உரிமை இல்லை எனவும், உரிமம் பெறாத துப்பாக்கிகளின் பயன்பாடு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :