வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகம் முழுதும் தமிழ் கலாச்சாரம் காணப்படுகிறது என டில்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடந்த தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சியில் பட்டு, வேட்டி சட்டையுடன் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார்.
நாளை தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இல்லத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி பட்டு வேட்டி, பட்டுசட்டை, அங்கவஸ்திரம் அணிந்து பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியது.
ஜனநாயகத்தின் தாய் இந்தியா. அதில் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அவற்றுள் தமிழ்நாட்டில் உத்திரமேரூரில் 1100-1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றிய பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன.
உலகின் பழமையான மொழி தமிழ். இதை ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம். தமிழ்த் திரையுலகம் நமக்குச் சின்னச் சின்னப் படைப்புகளை வழங்கியிருக்கிறது:
சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையிலிருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரிலிருந்து கேப் டவுன் வரை, சேலத்திலிருந்து சிங்கப்பூர் வரை, தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைத் காணலாம். பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், அவை உலகம் முழுவதும் குறிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினர். விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் ,தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை,அனுராக் தாகூர், சி.பி. ராதாகிருஷ்ணன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement