₹ 10 லட்சத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற காமெட் EV காருக்கான உற்பத்தியை எம்ஜி மோட்டார் நிறுவனம் துவங்கியுள்ளது. 250 கிமீ முதல் 300 கிமீ வரை ரேஞ்சு எதிர்பார்க்கப்படுகின்ற காரின் விலை ஏப்ரல் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
குஜராத்தில் உள்ள ஹலோல் ஆலையில் முதல் காமெட் கார் உற்பத்தியை, MG மோட்டார் இந்தியாவில் புதிய பிரிவில் நுழைந்துள்ளது மற்றும் உலகளவில் பிரசத்தி பெற்ற GSEV பிளாட்ஃபாரத்தில் EV சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் மாடலாக விளங்கும்.
காமெட் EV
17.3 kWh மற்றும் 26.7 kWh திறன் கொண்ட பேட்டரி ஆப்ஷன் மூலம் இயக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை குறைப்பதற்காக பேட்டரி உள்நாட்டில் மிகவும் நம்பகமான டாடா AutoComp நிறுவனத்தில் இருந்து பெறப்பட உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதால் பேட்டரி பேக் விபரம் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
காமெட் இவி கார் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெறக்கூடும். எனவே ரேஞ்ச் ஆனது 200 கிமீ (17.3kWh) முதல் 300 கிமீ (26.7kWh) வரையிலான ரேஞ்சை கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
முழுமையான விபரங்கள் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.