கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
கர்நாடகாவில் பாஜக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த கூட்டுறவு வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடைபெற்றதாக புகார் வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் வங்கிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 16 இடங்களில் நடந்த இந்த சோதனையில் மோசடி தொடர்பான ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ரூ.3.3 கோடி கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளும் வருமான வரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்பட்ட நிலையில், வங்கிகளில் காசோலையை பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
இது தவிர, சில வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 கோடி அளவுக்கு கணக்கில் காட்டாமல் கடன் வழங்கியதும் மோசடியாக கூட்டுறவு சங்கங்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம், வைப்புத் தொகையாக போடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பெயர்கள் சிக்கியுள்ளது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
newstm.in