இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நேற்று புதிதாக 7,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயலக அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியதாவது: அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி சுமார் 6 மில்லியன் இருப்பில் உள்ளது.
எனவே இளைஞர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். அடுத்த 90 நாட்களுக்குள் 6 முதல் 7 மில்லியன் கோவிஷீல்டு தடுப்பூசியை இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சீரம் நிறுவனம் கடந்த 2021 டிசம்பர் மாதம் கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.