டோக்கியோ,
தைவானுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் தென் சீன கடல் விவகாரத்தில் சீனாவை எதிர்கொள்வதற்காகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவாக்கம் செய்யவும் ஜப்பான் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக ஒத்த மனமுடைய நாடுகளுடன் குறிப்பிடும்படியாக ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு ராணுவ உதவியை வழங்குவது என புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இதனால், பேரிடர் நிவாரணம் தவிர்த்து, ராணுவ நோக்கங்களுக்காக உள்ள வளர்ச்சி நிதியை வேறு விசயங்களுக்கு பயன்படுத்துவது கூடாது என்ற தனது முந்தின கொள்கையை ஜப்பான் அரசு உடைத்து உள்ளது.
இதன்படி, வெளிநாட்டு பாதுகாப்பு உதவியாக பிலிப்பைன்ஸ் முதலில் பலன் பெறும். அதனுடன், மலேசியா, வங்காளதேசம் மற்றும் பிஜி உள்ளிட்ட நாடுகளும் பயன்பெறுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என ஜப்பானிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இதற்காக ஜப்பான் அரசு 1.5 கோடி அமெரிக்க டாலரை தனியாக தனது 2013-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கி வைத்து உள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து குவாட் அமைப்பில் கூட்டணியாக ஜப்பான் நாடு உள்ளது. இதனை வளர்ந்து வரும் தனது வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கம் என சீனா கூறி வருகிறது.