சுற்றுலா பயணிகள் செம குஷி..!! சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு “பீர் பஸ்”..!!

புதுச்சேரி மாநிலம் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக விளங்கி வருவதால் தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ் எனும் புது சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வருகிற 22ம் தேதியன்று இந்த சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ஒருநாள் பயணமாக நபர் ஒருவருக்கு ரூ.3,000 வசூலிக்கப்படும். இந்த பஸ்ஸில் வித விதமான உணவுகளை சாப்பிட்டபடி புதுச்சேரியின் அழகை கண்டு ரசிக்கலாம்.

அதேநேரம் பீர் பஸ் என்பதால் பேருந்தில் மது அருந்தலாம் என யாரும் நினைக்க வேண்டாம். இதுபற்றி அந்நிறுவனத்தின் அமைப்பாளர்கள் கூறியதாவது பீர் பஸ் என அழைப்பதால் பேருந்தில் மது அருந்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம். ஆகவே பேருந்தில் பீர் குடிக்க அனுமதிக்கமாட்டோம். எனினும் அரசு அனுமதித்த இடத்தில் பேருந்து நிறுத்தப்படும்.அங்கு பீர் அனுமதிக்கப்படும் என்று கூறுகின்றனர்.

சென்னையிலிருந்து ஒரே நாளில் 35 -40 சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சென்னைக்கு பேருந்து வரும். தற்போது இதற்குரிய முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அன்றாட பணிகளில் மூழ்கி கிடப்பவர்கள் வார விடுமுறையில் ரிலாக்ஸ் ஆக உற்சாகப்படுத்தி புதுப்பித்துக் கொள்ள இந்த சுற்றுலா உதவும் என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.