லக்னோ: உ.பி.,யில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பிரபல தாதா அதிக் அகமதுவின் மகன் ஆசாத் என்பவர், போலீசாருடன் நடந்த என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
ஆசாத் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. பிரயாக்ராஜ் நகரில் உமேஷ் பால் என்பவர், கொலை வழக்கில் தலைமறைவான ஆசாத் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்து இருந்தனர்.
உத்தர பிரதேச – மத்திய பிரதேச மாநில எல்லையில், ஜான்சி என்ற இடத்தில் அதிரடிப்படையினருடன் நடந்த மோதலில், ஆசாத் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றொரு குற்றவாளி குலாம் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அப்பா தாதா அழுதார் !
பிரபல தாதா அதிக் அகமது சமாஜ்வாதி கட்சியில் இருந்தவர். பல கிரிமினல் வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இவர் தன்னையும் தன் குடும்பத்தினரையும் போலீசார் கொன்று விடுவார்கள் என ஏற்கனவே கூறியிருந்தார். சந்தேகத்திற்கு ஏற்ப இன்று மகன் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளார். மகன் இறந்த செய்தி தாதாவுக்கு தெரிய வந்ததும் அவர் கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதார்.
கொலையான உமேஷ்பாலின் குடும்பத்தினர் இன்றைய என்கவுன்டரை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நீதி கிடைத்துள்ளது , முதல்வர் யோகிக்கு நன்றி என கூறியுள்ளனர் .
Advertisement