சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ N55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரியல்மி நிறுவனத்தின் நார்சோ சீரிஸ் வரிசையில் இந்த போன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது நார்சோ N55 ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.72 இன்ச் ஃபுல் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 64 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள இரண்டு கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5000mAh பேட்டரி
- 33 வாட்ஸ் SuperVOOC சார்ஜிங் சப்போர்ட்
- நீலம் மற்றும் கருப்பு என இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 4ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 63 நிமிடங்களில் 100% சார்ஜை இந்த போன் எட்டும் என தெரிகிறது
- ஆப்பிள் நிறுவனத்தின் அண்மைய மாடல் போனில் இருப்பது போன்ற மினி கேப்ஸ்யூல் நோட்டிபிகேஷனும் இந்த போன் கொண்டுள்ளது
- இந்த போனின் விலை 4ஜிபி வேரியண்ட் ரூ.10,999 மற்றும் 6ஜிபி வேரியண்ட் ரூ.12,999
- விலையில் அறிமுகச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
Introducing the new #realmenarzoN55.
Available in two stunning colors and two variants:
4GB+64GB priced at ₹10,999*
6GB+128GB priced at ₹12,999*Get a special offer of ₹500/1000* with HDFC/SBI cards from 18-21 April on First Sale.
*T&C Apply pic.twitter.com/nPjGpTAE1C
— realme narzo India (@realmenarzoIN) April 12, 2023