அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
தனது உரிமையாளரை தேடி, செல்ல நாயின் நெடும்பயணம் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வட அமெரிக்க மாகாணமான அலாஸ்காவைச் சேர்ந்தவர் இவொரிகன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பனியால் உறைந்த தீவுப் பகுதியான சவோங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது தனது இரண்டு செல்ல நாய்க்குட்டிகளான நானுக் மற்றும் ஸ்டார்லைட் ஆகியன தொலைந்து போனது. உரிமையாளர் எங்கெங்கோ தேடியும் நாய்க்குட்டிகள் கிடைக்கவில்லை. ஆழ்ந்த துயரத்தில் இவொரிகனுக்கு திடிரென ஒரு இன்ப அதிர்ச்சியும், மீளாத்துயரமும் காத்திருந்தது.
தொலைந்து போன ஸ்டார்லைட் நாய்க்குட்டி தனது வீட்டைத் தேடி திரும்பி வந்ததை கண்டு சந்தோசப்பட்ட உரிமையாளருக்கு, மற்றோரு ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த நானுக் நாய்க்குட்டியை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் சுமார் ஒரு மாதம் கழித்து நானுக்கின் வருகை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உறைந்த பனிக்கடலைத் தாண்டி, துருவ கரடியால் கடிக்கப்பட்ட காயங்களுடன் ஒரு வயதான நானுக் அலாஸ்காவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியது. செல்ல நாய் 241 கிமீ உறைந்த பெரிங் பனிக்கடலை கடந்து ஒரு காவியமான மலையேற்றத்தை மேற்கொண்டது. அலாஸ்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள சவோங்காவின் வடகிழக்கில் உள்ள உள்ளூர்வாசிகள், நாயின் படங்களை பதிவேற்றத் தொடங்கியபோது சமூக ஊடகங்களின் உதவியுடன் செல்ல நாய் மீட்டெடுக்கப்பட்டது.
பனி, கடல், மலையேற்றம் என இந்த நெடும் பயணத்தில் செல்ல நாய் எப்படி உயிர் பிழைத்திருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக உரிமையாளர்கள் கூறினர். ஆனால் அவன் “புத்திசாலி” நாய் என்பதை அவர்கள் குறிப்பிட மறக்கவில்லை. ” நீண்ட தனிமையில் அவன் உயிர் பிழைத்தலை எதிர்கொண்டு இருக்கிறான். பறவைகளையும், சிறு விலங்குகளையும் அவன் வேட்டையாடி உண்டிருக்கலாம். நானுக் இந்த உலகத்தில் உயிர் வாழ்தலை வெற்றி கொண்டுள்ளான்’’ என உரிமையாளர் இவொரிகன் கூறினார் என AP செய்தி நிறுவனம் கூறியது.
“ஷாக் ரிப்போர்ட்”.. கர்ப்பிணிகளை கொரானா தாக்கினால்.. குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு.. கடைசியில் மரணம்..
“அவன் ப்படி வேல்ஸ்-க்கு சென்றான் என்று எனக்குத் தெரியவில்லை. அவன் வேட்டையாடும் போது பனிக்கரடிகள் அவனை கடித்திருக்கலாம். நானுக்கின் பயணம் எப்போதும் ஒரு மர்மமாகவே இருக்கும் என்றாலும், அதன் உடலில் உள்ள அடையாளங்கள் மற்றும் காயங்கள், அவனுடைய போர்க்குணத்தை காட்டுகிறது. வீங்கிய கால் மற்றும் சில கடித்த அடையாளங்களைத் தவிர, நானுக்கின் உடல்நிலை சீராக இருந்தது’’ என்று உரிமையாளர் கூறியுள்ளார்.