பிசி, எம்பிசி, சீர்மரபினர் விடுதிகளுக்கு ரூ.16 கோடியில் சொந்தக் கட்டடம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிசி, எம்பிசி, சீர்மரபினர் விடுதிகளுக்கு ரூ.16 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டித்தரப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ்‌.மஸ்தான்‌அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.13) பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர் ‌மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர்‌ நலன்‌ மற்றும்‌ வெளிநாடு வாழ்‌ தமிழர்‌ நலத்துறை அமைச்சர்‌ செஞ்சி கே.எஸ்‌.மஸ்தான் தன் துறையின் கீழ் புதிய அறிப்புகளை வெளியிட்டார். அவற்றின் முக்கிய அம்சங்கள்:

  • பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ விடுதிகளில்‌ தங்கி
  • பயிலும்‌ 10 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவ மாணவியருக்கு 25 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ வினா வங்கி வழங்கப்படும்‌.
  • 290 பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ கல்லூரி விடுதிகளுக்கு 1 கோடியே 88 லட்சத்து 50 ஆயிரம்‌ ரூபாய்‌ செலவில்‌ இடியாப்ப அச்சு இயந்திரம்‌ வழங்கப்படும்‌.
  • 385 பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ மாணவியர்‌ விடுதிகளுக்கு 1 கோடியே
  • 56 இலட்சத்து 44 ஆயிரம்‌ ரூபாய்‌ செலவில்‌ LED தொலைக்காட்சி DTH இணைப்புடன்‌ வழங்கப்படும்‌.
  • 12 பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, சீர்மரபினர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ மாணவியரின்‌ விடுதிகளில்‌ மாணவியர்‌ பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா 12 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ பொருத்தப்படும்‌.
  • விடுதிகளில்‌ தங்கிப்‌ பயிலும்‌ மாணவ, மாணவியரின்‌ நலன்‌ கருதி பின்வரும்‌ 3 பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌
  • பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ விடுதிகளுக்கு சொந்தக்‌ கட்டடங்கள்‌ 16 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம்‌ ரூபாய்‌ செலவில்‌ கட்டப்படும்‌.
  • 1. பிற்படுத்தப்பட்டோர்‌ நலக்‌ கல்லூரி – 100 மாணவியர்‌ எண்ணிக்கை கொண்ட விடுதி, வேப்பூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டம்‌
  • 2. மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ நலப்‌ பள்ளி – 50 மாணவர்‌ எண்ணிக்கை கொண்ட விடுதி, மீன்சுருட்டி, அரியலூர்‌ மாவட்டம்‌
  • 3, சீர்மரபினர்‌ நலக்‌ கல்லூரி -100 மாணவியர்‌ எண்ணிக்கை கொண்ட விடுதி, கமுதி, இராமநாதபுரம்‌ மாவட்டம்‌
  • பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ வகுப்புகளைச்‌ சார்ந்த மாணவியரின்‌ நலனுக்காக, புதிதாக 3 கல்லூரி விடுதிகள்‌ 1 கோடியே 30 லட்சத்து 22 ஆயிரம்‌ ரூபாய்‌ செலவில்‌ தொடங்கப்படும்‌.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.