நாடு முழுவதும் 71,000 பேருக்கு ஒன்றிய அரசில் பணியாற்ற பணி நியமன ஆணைகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
ரோஜ்கார் மேளா
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவது தொடர்பாக உருவாக்கப்பட்ட திட்டம் ‘ரோஜ்கார் மேளா’. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி 74 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற பணி ஆணைகளை வழங்கினார்.
71000 பேருக்கு வேலை வாய்ப்பு!
இன்று (13 ஏப்ரல்) நாடு முழுவதும் 71,000 பேருக்கு மத்திய அரசில் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற பணி ஆணைகளை பிரதமர் மோடி டெல்லியிலிருந்து கணொலி காட்சி மூலம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக முக்கிய தலைவர்கள், கலந்து கொண்டனர்.
என்னென்ன பணிகள்?
அஞ்சல் உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், ரெயில் மேலாளர், ரெயில் நிலைய அதிகாரி, சீனியர் வணிகவியல் மற்றும் டிக்கெட் கிளார்க், ஆய்வாளர், உதவி இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள், செவிலியர்கள், நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.
தமிழ் புத்தாண்டு விழா!
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பாஜக சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.