இந்தியாவில் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட சற்று அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக பீகார், உத்திரபிரதேஷ், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 16ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஏப்ரல் 17ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.