மாமனாருடன் வீட்டை விட்டு ஓடிய மருமகள்!!

மாமனார் மீது காதல் வயப்பட்டு மருமகள் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சிலூர் என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ் பைராகி என்பவரின் மகன் பவன் பைராகிக்கு திருமணமாகி 6 மாத குழந்தை உள்ளது. பவன் பைராகி, மனைவி மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார்.

வேலை காரணமாக பவன் பைராகி அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், வீட்டில் அவரின் மனைவியும், தந்தையும் தனியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் ரமேஷ் பைராகியும், அவரது மருமகளும் வீட்டைவிட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டனர். இதுகுறித்து அறிந்த பவன், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், தன்னுடைய மனைவி நேர்மையானவர் என்றும், அவரது குணத்தை பயன்படுத்தி, தன் தந்தை, ஏமாற்றி அழைத்து சென்றுவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தனது தந்தை தன் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்தார் எனவும், தன் மனைவியை மிரட்டி அழைத்துச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.