கொழும்பு, ”இலங்கையில், ‘ரேடார்’ அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை,” என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையின், டோண்ட்ரா பே என்ற இடத்தில், 45 ஏக்கர் பரப்பளவில், ‘ரேடார்’ அமைத்து, கூடங்குளம், கல்பாக்கம் அணு மின் நிலையம் உட்பட இந்திய பெருங்கடல் பகுதியை உளவு பார்க்கும் முயற்சியில், சீனா ஈடுபட்டுள்ளதாக, சமீபத்தில் தகவல் வெளியானது.
இது தொடர்பாக, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடற்படை உளவுப்பிரிவு அறிக்கையும் அளித்தது.
இந்நிலையில் நேற்று, ”இலங்கையில் ரேடார் அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை,” என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இந்த விவகாரம் குறித்து, வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டேன்.
அப்படி எந்தவொரு கோரிக்கையும் சீனாவிடம் இருந்து வரவில்லை என தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement